Wednesday 21 May 2014

ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது எப்போது.?

கர்ப்ப கால கணக்கு தெரியுமா...?

பெண்ணின் கர்ப்பம் வேதம்...

பொதுவாக யாராக இருந்தாலும் திருமணமாகி உடலுறவு கொண்டவுடன் குழந்தை பிறந்து விடுவதில்லை.இதற்கு கணவன்-மனைவி ஜஈதகங்கள் சரியாக இருக்க வேண்டும்.அதெல்லாம் கிடையாது ஆண்-பெண் உறவு கொண்டால் குழந்தை பிறந்துவிடுமென்று இந்த விஞ்ஞான யுகத்திலும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.இது பற்றிய ஒரு அலசல்தான் இந்த கட்டுரையின் நோக்கம்.ஒரு சிலர்க்கு விதி விலக்காக இருக்கலாம் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலோர் குழந்தையின்றி தவிக்கிறார்கள்.ஏன்..?

ஆண்-பெண் முப்பது வயதை தாண்டிய திருமணங்கள்.உணவு பழக்க வழக்கங்கள்.உடல் பருமன் பிரச்சினை.தட்ப-வெப்ப சூழ்நிலை.இது ஒரு பக்கமென்றால் பொருத்தமில்லா காதல் திருமணங்கள்.பல்வேறு ஜாதக தோஷங்களை கவனிக்காது கல்யாணம் நடந்தால் போதுமென்று கவனிக்காது விட்டுவிடுகிறார்கள்.

ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை பொறுத்து இந்த மாதவிலக்கு ஒழுங்காக இருக்கவேண்டும்.அதாவது 28-தினங்களுக்கு ஒரு முறை பெண் மாதவிலக்கு அடையவேண்டும்.மாதவிலக்கு என்பது சினைப்பையில் உருவான அவளுடைய முட்டை 28-தினங்களுக்கு பிறகு வெளியேற்றப்படும் நிகழ்ச்சியாகும்.அதாவது எந்த திதியில் அவள் மாதவிலக்கு அடைகிறாளோ அதிலிருந்து 28-வது திதியில் புதிய கருமுட்டை உருவாகும்.இந்த சமயத்தில் உடலுறவு நிகழும்போது கர்ப்பம் தரிக்க ஏதுவாக அமையும்.

ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் இயக்கத்தால் பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன.இந்த ஹார்மோன் இயக்கத்தை சந்திரன் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.எனவே பெண்ணினுடைய கரு முட்டை கருத்தரிக்கிற நிலைக்கு போவதற்கு சந்திரன் சஞ்சாரம் முக்கியமாகும்.

ஒரு பெண் கரு தரிப்பதற்கு சூரியன்-சந்திரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதோடு பூமிகாரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாயும் கெட்டுவிடக்கூடாது.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் எனது ஜி-மெயிலுக்கு விருப்பம் தெரிவியுங்கள்.இதன் பல்வேறு தகவல்களை தொடர்ந்து எழுதுகிறேன்.நன்றி..
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates