Wednesday 18 June 2014

மரப் பொருத்தம் தெரியுமா..?

மரப்பொருத்தம் என்றால் என்ன தெரியுமா..? இருபத்தியேழு நட்சத்திரங்களும் என்னென்ன மரம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.இதை பால் உள்ள மரம் பாலில்லா மரமென்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.முதலில் அவை என்னென்னவென்று பார்ப்போம்.

பால் உள்ள நட்சத்திரங்கள்.

கிருத்திகை, ரோகிணி, பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்த்தம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி. இந்த பதினைந்து நட்சத்திரங்களும் பால் உள்ளவை.

பாலற்ற நட்சத்திரங்கள். அதாவது மலட்டு தன்மையுள்ளது.

அசுபதி, பரணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ஆகிய பனிரெண்டு நட்சத்திரங்களும் பாலில்லாதவை.

இதன்படி விதி என்ன..?

பெண் நட்சத்திரம் பால் உள்ளதாக அமைந்து,ஆண் நட்சத்திரம் பாலற்றதாக அமைந்தால் குழந்தை உண்டு.

ஆண்நட்சத்திரம் பால் உள்ளதாகவும்,பெண் நட்சத்திரம் பால் இல்லாத்தாகவும் அமைந்தால் பெண் குழந்தை இருக்காது.

ஆண்-பெண் இரண்டு நட்சத்திரங்களும் பாலற்றதாக அமைந்தால் பிள்ளை பிறக்காது.

இரண்டு பேருடையதும் பால் உள்ளதாக இருந்தால் குழந்தை உண்டு.

எப்படியெல்லாம் நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். நாம்தான் எதையும் கவனிக்காமல் மாட்டிக்கொண்டு பின்னர் வருந்துகிறோம்.ஆக குழந்தை பிறப்பிற்கு இந்த மரப்பொருத்தம் அவசியமாகும்.






Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates