Tuesday 8 July 2014

கள்ள காதல் வர காரணமென்ன..?

இந்த பாடலை படிங்களேன்.எதுவும் விதிப்படிதான் நடக்கும் சும்மா வருமா சோகம்.

பாரப்பாயின்னமொரு புதுமை கேளு
பாம்புடன் மூன்றோனும் தீயனாகில்
கூறப்பாயெத்திடத்தில் கூடிட்டாலும்
குமரி கள்ள புருஷனையும் கூடுவாளாம்
ஆரப்பா அகந்தனிலே இவள்தான் மூப்பி
அக்கணவன் அவள் சொல்லை கடக்கமாட்டான்
ஊரப்பாபூரருகில் கடலுமுண்டு
உத்தமனேயிருக்குமடா ஆறுமாரே.

இந்த பாட்டின் பொருளென்ன..?

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மூன்றாமிடத்து அதிபதி தீய கிரகமாகி அதனுடன் பாம்பு என்று சொல்லக்கூடிய ராகு எந்த இடத்தில் சேர்ந்து இருந்தாலும் தாலிகட்டிய கனவனை விட்டு வேறு ஒரு ஆணுடன் கூடி குலவுவாள்.இவள் தன் கனவனைவிட வயதில் மூத்தவளாகவும் இருப்பாள்.இவள் சொல்வதை கனவனும் கேட்டு நடப்பான்.இவள் வசிக்குமிடத்தில் கடல் அல்லது ஆறு இருக்கும்.

நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா..?அதனால்தான் ஆணைவிட பெண்ணுக்கு ஐந்து வயது குறைவாக இருக்க வேண்டும் என்றார்கள்.இன்றைய கால கட்டத்தில் பொருள் தேட ஆண் வெளியூர்-வெளி நாடென போகவேண்டிய நிர்ப்பந்தம்.இதனால் தனித்திருக்கும் பெண் தவறு செய்ய தயங்க மாட்டாள்.அதற்கு ஜாதக பலம் எப்படி இருக்க வேண்டுமென்பதை சுட்டி காட்டுகிறது. கூட்டு குடும்ப வாழ்க்கை ரத்தாகி போன இன்றைய காலகட்டத்தில் பெண் தன் இஷ்டப்படி நடக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.கற்பு ஏலம்விடும் கதையாகி விடுகிறது.எல்லா பெண்களுமா இப்படி..? சிலரின் நடவடிக்கை இப்படியிருக்க இதுதான் காரணம்.அதனால்தான் பொருத்தம் பார்க்கும் போது பெண்ணின் ஜாதகத்தை தனியாக ஆய்வு செய்து பார்க்கிறார்கள்.திருமணமாகாத நீங்களும் கவனமாக இருங்கள்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates