Sunday, 18 May 2014

பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகள் யார்...?

ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதென்பது சாதரணவிஷயமே அல்ல.படிக்க வைக்கவும்-பாதுகாப்புடன் வளர்க்கவும்-பருவமெய்திய பிறகு முறைப்படிதிருமணம் செய்யவும் மிகப்பெரிய போராட்டமே நடத்துகிறார்கள்.சில பிள்ளைகள் பெற்றோரின் உண்மையான பாசத்தைப் புரிந்து கொள்ளாமல் வேலை கிடைத்து சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் இனி நம்மை யார் என்ன செய்யமுடியும் என்கிற எண்ணத்தில் பெற்றோரை உதறித்தள்ளி ஒதுக்கிடும் அவல நிலையை காணமுடிகிறது.

தங்கள் தவறை சுட்டிக்காட்டக்கூடாது. எது செய்தாலும் சகித்துக் கொள்ளவேண்டும்.அறிவுரை கூறக்கூடாது.தான் செய்வது சரியென்று எல்லோரும ஏற்றுக் கொள்ளவேண்டும்.என்னும் மனநிலைக்கு பல பிள்ளைகள் வந்து பெற்றோரை வேதனைப்படவைக்கிறார்கள்.இதற்கும் பிறப்பு ஜாதகம்தான் காரணமா..? வேறென்ன..? எல்லா பிள்ளைகளும் இப்படி இருப்பதில்லையே..

வளர்ந்தவர்கள் வயதானவர்களை மதிப்பதில்லை.தன்னால்தான் இந்த குடும்பமே இருக்கிறதென்கிற உணர்வு ஏற்பட்டு நம்மை யார் என்ன கேட்க முடியும் என்னும் எண்ணம் ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் தப்பிக்க முடியாத சிக்கலில் மாட்டப்போகிறாரென்று அர்த்தம்.எப்போதுமே எவ்வளவு திளமை வசதி ஒருவருக்கு வந்தாலும் கட்டுப்பாட்டை மீறி நடக்கும்போது ஓர் அபாயபகுதிக்குச் சென்றுகொண்டிருக்கிறார் என்றாகிவிடும். ஏன் இந்த குணம் வருகிறது...? இப்படியெல்லாம் இருந்தால் விபரீதம் ஏற்படுமென்பதை நவக்கிரகங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. யானையாக இருந்தாலும் பாகனுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும்.

இதோ பெற்றோரை புறக்கணித்த ஒரு பெண்ணின் ஜாதகம்...

பிறந்த தேதி--22-07-1976   பிறந்த நேரம்--காலை-11-30  பிறந்த இடம்--பட்டுக்கோட்டை..--தஞ்சாவூர்  மாவட்டம்..தமிழ் நாடு..இந்தியா.

சாரம் நின்ற ஜாதக பலம்  --சித்திரை-01ல் -கன்னி லக்கினம்--கிருத்திகை-04ல் ரிஷபத்தில்-சந்திரன்--பூசம்-01ல்-கடகத்தில்-சூரியன்--பூரம்-01ல்-சிம்மத்தில் செவ்வாய்-ஆயில்யம்-02ல்-கடகத்தில்-புதன்--கிருத்திகை-02ல்-ரிஷபத்தில்-குரு--பூசம்-04ல்-கடகத்தில்-சுக்கிரன்--பூசம்-02ல்-கடகத்தில்-சனி-சுவாதி-03ல்-துலாத்தில்--ராகு  பரணி-01ல்--மேஷத்தில்--கேது--உத்திரம்--04ல்-கன்னியில் மாந்தி..

இந்த ஜாதகத்தில் 3-8க்குடைய செவ்வாய் சாரத்தில் லக்கினம் நிற்க-அந்த செவ்வாய்-2.9-க்குடையவர் (பூரம்} சாரத்தில் விரய பாவத்திலிருக்குமேயானால் என்ன செய்யும்..?

தைரியம்-துணிச்சல்-மிகும் தான் நினைப்பதை சாதிக்கும் ஆற்றல் வரும் கல்வி வேலையில் முன்னேற்றம் கிட்டும்-தான் சம்பாதிப்பதை தானே செலவு செய்யவும் பெற்றோரை மதிக்காமல் புறக்கணிக்கவும் செய்யும்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates