Thursday, 22 May 2014

இல்லறத்தில் குழப்பம் சண்டை விவாகரத்து வருவது ஏன்..?

பெரும்பாலும் நமது இந்திய கலாசாரத்தில் ஆண்-பெண் தேர்வு முறைகள் மிகவும் துல்லியமாக சாஸ்த்திர ரீதியாக கணித்து வகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதை நாம்தான் ஒழுங்காக கடைபிடிப்பதில்லை.இன்றைய அவசரயுகத்தில் சரியானபடி பொருத்தம் பார்க்க தவறிவிடுகிறார்கள், உடலும்-உள்ளமும்-குணமும் ஒத்த கருத்தில் இருப்பதை உறுதி செய்யாமல்-வெறும் பணம் நகை படிப்பு அழகு அந்தஸ்த்து என ஆசைப்பட்டு மாட்டிக்கொள்கிறார்கள்.ஆண்டு பல உருண்டோட வெளி நாட்டில் தங்கி வேலைபார்த்து கை நிறைய சம்பாதித்து ஊரில் கெளரமாக வாழ வேண்டுமென்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் நமது இளைஞர்கள் வயது ஆக ஆக வருத்தம் மேலிட வாழ்கிறார்கள்.அப்பாவின் காலத்தை விட நமது இளைஞர்களின் காலம் சிறப்பாக வசதி வாய்ப்புடன் இருந்தாலும் காலத்தில் திருமணம் கூடி வராமல் வருத்தம் மேலிட வாழ்கிறார்கள்.

ஆண்-பெண் திருமணத்தில் வில்லங்கம் வருவது ஏன்..? நட்சத்திர பொருத்தம் ஒரு பக்கமிருந்தாலும் ஜாதகம் சரியாக பார்ப்பதில்லை.இதன் காரணமாக ஒரு ஆண்-பெண்ணின் குண இயல்புகள் கண்டுணர முடியாமல் போய் விடுகின்றன.

ஒரு பெண் மேஷம் லக்கினம்-ராசியெனில் ஒரு ஆண் போல் செயல்படும் குண இயல்புகளிருக்கும்.இதை உங்களுக்கு புரியும்படி பட்டியலிடுகிறேன்.

மேஷம்-ஆண்-ரிஷபம்-பெண்-மிதுனம்-ஆண்-கடகம்-பெண்-சிம்ம்ம்-ஆண்-கன்னி-பெண்-துலாம்-ஆண்-விருச்சிகம்-பெண்-தனுசு-ஆண்-மகரம்-பெண்-கும்பம்-ஆண்-மீனம்-பெண்.இதுதான் முதல் படி...ஒரு பெண் ஆண் போல் செயல்படகூடாது.ஒரு ஆண் பெண் போல் செயல்படக்கூடாது.

யாராக இருந்தாலும் பொறுமை-சாந்தம் இருந்தால்தான் விட்டுக்கொடுக்கிற மனசு வரும். ஆண்-பெண் இருவருமே இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு போவதால் மிகவும் பொறுமையை கடைத்தாக வேண்டும். இதை ஜாதகத்தின் வழிதான் கண்டுபிடித்தாக வேண்டும். இது ஒரு குறிப்புதான்இன்னும் பல நுணுக்கமான விஷயங்கள் உள்ளது.ஜாதகத்தில் ஏழாமிட-எட்டாமிட தோஷங்கள்.செவ்வாய்-ஸர்ப்ப தோஷங்கள்.சனி-சந்திரன்-சூரியன்-சுக்கிரன்-ராகு-சந்திரன்-பூர்வ புண்ணிய பாதிப்பு-புத்திர பாக்கிய தடை-ஆயுள் தோஷம்-அதிர்ஷ்ட்ட பங்கம்-இப்படி பல கோணங்களில் பார்க்க வேண்டியுள்ளது.

இல்லறத்தில்-குழப்பம்-சண்டை-வந்தால் கூட பரவாயில்லை விவாகரத்து வழக்கில் மாட்டி வாழ்க்கை திசைமாறி போவதுதான் கொடுமை.முன் கூட்டியே எச்சரிக்கையாக இருப்பதற்காகத்தான் இந்த கட்டுரை படித்து பயன் பெறுவதோடு உங்கள் தலையெழுத்து எப்படி என்பதையும் தெரிந்து கொற்றுங்களேன்..
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates