Monday, 19 May 2014

சுப நிகழ்ச்சி...ஆன்மீக குறிப்புகள்...

நமது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கு முன்பும் நடந்த பினபும் குல வழக்கப்படி குலதெய்வத்திற்கு பூஜை காரியங்களும் பிதுருக்களுக்கு பிரீதி உண்டாக்கும் சிரார்தம்.தர்ப்பணம் போன்றவைகளை செய்தால் பித்துருக்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.அதேசமயம் இஷ்ட தெய்வத்தையும் மறந்து விடக்கூடாது..

நவக்கிரக ஸ்தலங்கள்...

சூரியன்--சூரியனார் கோயில்
சந்திரன்--திங்களூர்
செவ்வாய்--வைத்தீஸ்வரனகோயில்
புதன்-திருவெண்காடு
வியாழன்-குரு--ஆலங்குடி.திருச்செந்தூர்
வெள்ளி-சுக்கிரன்--கஞ்சனூர்-
சனி--திருநள்ளாறு-திருக்கொள்ளிக்காடு-குச்சனூர்
இராகு--திருநாகேஸ்வரம்-திருப்பாம்புரம்-திருகாளஹஸ்த்தி
கேது--கீழ்பெரும்பள்ளம்

இவையாவும் தஞ்சைமாவட்டம்-கும்பகோணம் பகுதியைச்சுற்றியுள்ள ஊர்களாகும்-இதில் சில ஆலயங்கள் மதுரை-திருப்பதியில் உள்ளது.

சுகம் அடைய-நல்ல உணவு கிடைக்க--வியாதிவிலக-கீழ்க்கண்ட மந்திரத்தை உபாசனை செய்யவும்..

நித்யான்ன தான் நிரதம்
ஸச்சிதானந்த விக்ரஹம்
ஸர்வ ரோக ஹரம் தேவம்
சுப்ரமண்ய முபாஸ் மஹே..

ஓரு அறிவுரை..

உழைப்பு  முதலில் தீமையும் இறுதிவரை வறுமையையும் விரட்டி விடும்..
தகுதிக்கேற்ற வசதிகளை செய்து கொள்வாயாக-சக்திக்கு மீறிய எந்த செலவையும் செய்யாதே இளமையில் கடைப்பிடிக்கும் நிதானம் முதுமையில் ஆதாயத்தைத் தரும் உன் தொழிலில் உன் கவனம் முழுவதையும் செலுத்துவாயாக..

இன்னும் தொடரும்...



Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates