Saturday, 10 May 2014

தலையெழுத்து ஜோதிட சாஸ்திர இணைய இதழ் - அறிமுகம்

ஏன் இப்படி ஒரு பெயர்..?

பெரும்பாலும் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு நாளாவது பேச்சு வாக்கில் இந்த தலையெழுத்து என்ற வார்த்தையை ஏதாவதொரு நிலையில் சொல்ல வேண்டிய தருணம் வரத்தான் செய்கிறது.

தலையெழுத்து சரியாக இருந்தா எல்லாம் சரியாக இருக்குமென்று பேசுவதை பார்த்திருக்கிறோம். இந்த வார்த்தையை அடிக்கடி கேட்ட காரணத்தால் நாமும் ஜோதிட ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பதால் இந்த வார்த்தையை நமது இணைய இதழுக்கு தலைப்பாக வைத்தோம்.

சரி. தலையெழுத்தை படிக்க முடியாது என்றார்கள். ஆனால் நமது இணைய இதழை எல்லோரும் படிக்கலாம். படிப்பது மட்டுமின்றி விழிப்புணர்வோடு செயல்படவும் உதவும். உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம் இதில் பல்வேறு ஜோதி - ஆண்மீக - இலக்கிய - மருத்துவ - நவீன விஷயங்கள் அடங்கிய கருத்து பெட்டமாக அமைந்திருக்கும். ஏனோதானோவென்று இருக்காது.

தலையெழுத்து நன்றாக உள்ளதென்று சொல்ல போகிறீர்கள். உண்மையை உரக்க சொல்லி நன்மைகள் பெறுவதே நமது நோக்கம். தத்துவம் சுமந்து தனித்துவம் பெற்று நித்தமும் புதுபுது விஷயங்கள் தெரிந்து தலையெழுத்தில் பல்வேறு ஆக்கங்களை காண்போம். விதியின் ரகசியம் உணர்வோம். தலையெழுத்திற்கு ஆதரவு தந்து அரவணைப்பீர்... வாசிப்பீர்... நேசிப்பீர்...
அன்புடன்,
ஆஸ்ட்ரோ சிவம்.

Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates