Thursday, 19 June 2014

ஏழரை சனி என்ன செய்யும்...?

ஏழரை சனி என்ற உடன் நம்ம ஆட்கள் நடு நடுங்கி போவதை பார்க்க முடிகிறது. அது பற்றிய ஒரு தகவல்..

ஏழரை சனியென்பது ஏழரை ஆண்டுகளாகும்.ராசிக்கு பனிரெண்டாமிடம் வரும்போது,விரைய சனி யென்றும்,ராசிக்கு வரும்போது ஜென்மச்சனியென்றும்,ராசிக்கு இரண்டாமிடம் வரும்போது வாக்கு-தனபாவ பாதச்சனியென்றும் கூறுவார்கள்.ஒரு ராசியை ஏழரை வருடங்கள் பிடித்துக்கொள்ளும்.இதில் அவரவர் திசா புத்தி அடிப்படையிலும்,பூர்வ புண்ணியத்தின் பிரகாரமும் நல்ல-தீய பலன்கள் நடைமுறையிலிருக்கும்.

சனி பனிரெண்டு ராசிகளையும் சுற்றி வர முப்பது வருடங்களாகும்.அதாவது ஒரு ராசியில் ரெண்டரை வருடங்களிருக்கும்.உதாரணமாக இப்போது துலாம் ராசிக்கு ஏழரை என்றால்.அது கன்னி ராசிக்கு வந்த போது ஏழரையின் ஆரம்பம். 

பனிரெண்டாமிடம் வந்தவுடன்--வெளிநாட்டு பயணம்.
ஜென்மச்சனி மாறியதும்-- திருமணம்.
பாதச்சனியானதும்--பிரச்சினை ஆரம்பம்.

இப்படியாக பலன்களிருக்கும்.இப்போது 16-12-2014 ல் சனி பெயர்ச்சியாகிறது. துலாம்--விருச்சிகம்--தனுசு இந்த மூன்று ராசிக்கும் ஏழரையாகும். கன்னி ராசிக்கு சனி விடுகிறது.

கைது செய்து வைத்திருந்த கன்னி ராசியன்பர்களை சனி பகவான் விடுதலை செய்திடுவார்.

ஒரு கணக்கு..

முப்பது மாதம் ரெண்டரை வருடம். தொண்ணூறு மாதம் ஏழரை வருடம்.ஆக ஒரு ராசிக்கு சனி பகவான் வந்தால் அவ்வளவு எளிதில் போய் விட மாட்டார்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates