Wednesday, 18 June 2014

யோனிப்பொருத்தம் விளக்கம் பல...

எந்த நட்சத்திரத்திற்கு என்ன மிருகம் என்று பார்த்தோம்.இதில் பகை மிருகங்கள் எவை..?

எருமைக்கு பகை--பசு,மான்,நாய்,

பசு-மான்-நாய்க்கு பகை--புலி

யானைக்கு பகை--புலி,சிங்கம்,

குதிரைக்கு பகை--எருது.

நாய்க்கு பகை--மான்,புலி.

குரங்குக்கு பகை--நாய்,ஆடு, பாம்பு

பூனைக்கு பகை--நாய்,புலி,

எலிக்கு பகை--பூனை,பாம்பு,

பாம்புக்கு பகை--கீரி.ஆடு.

உங்கள் நட்சத்திரத்திற்கு என்ன மிருகம்,உங்களின் மனைவி அல்லது காதலி நட்சத்திரத்திற்கு என்ன மிருகம் இவை இரண்டும் நட்பா பகையா என்பதை கவனிக்க மறவாதீர்கள்.அப்படி பகையென்றால் உங்களின் தாம்பத்திய சுகம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும்.ஆணும்-பெண்ணும் ஒற்றுமையுடன் சுகபலம் பெற இந்த பொருத்தம் முக்கியமாகும்.இதெல்லாம் பார்க்கத்தான் வேண்டுமா..? கண்டிப்பாக..இல்லா விட்டால் சண்டை படுக்கையறையில்தான் துவங்கும்.பாலும் கசந்ததடி பஞ்சனையும் சுட்டதடி என்றாகிவிடும்.ஒரு பெண் எதிர்பார்க்கும் உடலுறவு சுகத்தை ஒரு ஆண் தர தவறினாலோ அல்லது ஒரு ஆண் கற்பனையோடு காத்திருந்து ஏமாற நேர்ந்தால் வெவ்வேறு காரணங்களை கூறி பிரிந்து விடுகிறார்கள்.நீண்ட நாள் வெளி நாட்டில் தங்கி வேலை செய்பவர்கள்,சில சமயங்களில் இந்த பிரச்சினை காரணமாக மனைவியோடு சேரமுடியாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.சிலர் எந்த நேரமும் சண்டைபோட்டுக்கொண்டே இருப்பார்கள்,வீட்டு வேலை,வெளி வேலை முடித்து சந்தோஷமாக பேசி சல்லாப விளையாட்டில் ஈடுபட்டு உடலுறவு ஏற்படும் நேரத்தில் ஒருவருக்கொருவர் முகத்தை திருப்பிக்கொண்டால் என்னவாகும்..? கடுப்பும்,எரிச்சலும்,தலைதூக்கும்.தம்பதிகள் பலர் விவாகரத்து கேட்டு கோர்ட்டு வாசலை மிதிப்பதற்கும் யோனி பொருத்தம் காரணமாகிறது. இந்த ஜோதிட குறிப்பு உங்கள் கவனத்திற்கு பலமாக பாலமாக இருக்கட்டுமென்றே எழுதியுள்ளேன். திருமணம் ஆனவர்கள் உங்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்.மணமாகாதவர்கள் எச்சரிக்கையுடன் பொருத்தம் பாருங்கள்.


Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates