Thursday, 19 June 2014

சினிமாவில் வெற்றி பெற கிரகங்கள் எப்படி இருக்கணும்..?

இந்த உலகத்தில் புகழுக்கும் பொருளுக்கும் ஆசைபடாதவர்கள் யாரவது இருப்பார்களா..?அதில் குறிப்பாக சினிமாவில் எந்த வகையிலாவது புகுந்து வெற்றிபெற வேண்டுமென்று பல இளைஞர்களும்,யுவதிகளும் சென்னையை நோக்கி படையெடுத்தவாறு உள்ளனர்.இதில் வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிட்டிவிடுவதில்லை.பலர் விட்டில் பூச்சிகளாய் மடிந்து போகிறார்கள்.வாழ்க்கையை தொலைத்து விட்டு,என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்ததையும் தொலைத்து விட்டு தவிக்கிறார்கள். இதற்கெல்லாம் தலையெழுத்து நன்றாக இருக்க வேண்டும்.சினிமாவில் சேர்ந்து புகழ் பெற,சம்பாதிக்க உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கணும் தெரியுமா..?

இதெல்லாம் ஜோதிடம் அறிந்தவர்களுக்கு ஓரளவு புரியும்.பொதுவாக உங்கள் ஜாதகத்தில் புதன்-சுக்கிரன் நன்றாக இருக்க வேண்டும்.இந்த கிரகங்கள் பரிவர்த்தனையாகவோ,சேர்ந்தோ இருப்பது முக்கியம்.இந்த கிரகங்களை குரு பார்க்க வேண்டும்.சந்திரன் கெட்டுப்போகாமல் நல்ல நிலையில் இருப்பது முக்கியம்.

குறிப்பாக ரஜினி காந்த் அவர்களின் ஜாதகத்தில் சிம்மம் லக்கினத்திற்கு விரையபாவமான பனிரெண்டாமிடத்திற்குறிய சந்திரன் தன் சுய சாரமான திருவோணத்தில் உள்ளது.ஆக லக்கினத்திற்கு ஆறாமிடம், மகரம் ராசி,பனிரெண்டிற்குறியவன்-ஆறில் இது விபரீத ராஜயோகமாகும்.சனி-கேது தன பாவத்தில் தன் பேச்சால்,நடையால்,சுறு சுறுப்பால் தனிஸ்டையில் மூலம் மக்களை கவர்ந்து புகழ் பெற்றார்.இது போன்று உங்க ஜாதகம் வித்தியாசமாக இருக்க வேண்டும்.

பெரும்பாலும் கடகம்-சிம்மம்-கன்னி-ரிஷபம்-கும்பம்-விருச்சிகம்-போன்ற உபய-ஸ்திர ராசிகளில் பிறந்தவர்கள் கலைத்துறையில் சாதிக்கிறார்கள்.இந்த ராசியென்று குறிப்பிட்டு சொல்ல முடியாது ஏதோ ஒரு வகையில் புண்ணியம் செய்திருந்தால் இந்த ஜென்மாவில் நீங்க பேரும் புகழும் பெறமுடியும்.சினிமாவில் ஜொலிக்க வேண்டுமா..?விதி உங்களுக்கு உதவ வேண்டும்.திட்டமிட்டு முயற்சித்தாலும் கட்டம் சரியாக இருக்க வேண்டும்.உங்களைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாமல் ஆசையில் குதித்து வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates