Saturday 2 August 2014

நெனைச்ச மாதிரி நடக்கமாட்டேங்குதே ஏன்..?

ஒவ்வொரு மனிதனுக்கும் நாம நெனைச்ச மாதிரி நடக்கலையேங்குற வருத்தம் உள்ளது.இதில் பல்வேறு போராட்டம் முயற்சியிருந்தும் காரியம் கை கூடி வராத போது இன்னும் வேதனை அதிகரிக்கும்.அதனால்தான் எல்லாவற்றுக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட விதி உள்ளது.இதை யாராலும் எவராலும் மாற்றிட இயலாது.ஒரு பக்கம் மழை தேவை,இன்னொரு பக்கம் மழை தேவையில்லை.ஒருவருக்கு வேண்டியது இன்னொருவருக்கு தேவைபடாது.இதை சீர் தூக்கி பார்த்தே இறை சக்தி ஒரு விஷயத்தை முடிவு செய்யும். நாம் ஆசைபட்டோம் என்பதற்காக இயற்கை நமக்கு வசமாகிவிடாது.அதனால்தான் எந்த ஒரு விஷயத்திற்கும் விதி வகுக்கப்பட்டுள்ளது.இந்த நேரம் இதுவென்பது முடிவு செய்யப்பட்டதாக உள்ளது.கோடை வெயில் {சித்திரை} குளிர் மழை {ஐப்பசி} என காலக்கணக்கு உள்ளது.ஒரு நாளைக்கு 24 மணி பகல் 12 இரவு 12 என அமைக்கப்பட்டுள்ளது.ஒரு மணிக்கு 2-1|2 நாழிகை 2-மணிக்கு ஐந்து நாழிகை-24 மணிக்கு 60 நாழிகை,பகல் 30-இரவு 30,இதன் அடிப்படை ஜோதிட விதியாக உருவமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டியது நம்பிக்கை ஆனால் அதை நடத்தி முடிக்க விதி சரியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

முயற்சிப்பது நமக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.அதற்காக நமது முயற்சி அனைத்தும் வெற்றி பெற வேண்டுமென்ற கட்டாயமில்லை.பத்து மாதம் அதாவது 300 நாள் என்பது ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளி வர எடுத்துக்கொள்ளும் காலமென்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் நாள் கணக்கு தவறிப்போவதால் சில மாறுபாடுகள் வரலாம் ஆனால் அது உண்மையாகிவிடாது.இதே போன்று ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கக்கூடிய உள்ளார்ந்த விஷயங்களை கவனப்படுத்தி பார்த்தால் நமது வாழ்க்கையைப்பற்றிய புரிதல் நமக்கு தெளிவாக கிட்டும்.நெனைச்ச மாதிரி நடக்காமல் போகும் விஷயத்திற்கு என்ன காரணமென்பது புரியும்.அவ்வப்போது சில உண்மைகளை காண்போம்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates