Thursday 25 December 2014

சோகமான வாழ்வை சொந்தமாக்கும் சில பெண்களின் பெயர்கள் எவை ஏன்...?

ஒரு பெண்ணோ,ஆணோ குழந்தையாக பிறந்தபிறகு அந்த குழந்தைக்கு பெயர் வைக்க படாதபாடு படுகிறார்கள்.நெட்டில் தேடி,ஜோதிடர்களை பார்த்து,சாமி பெயர் வைக்க யோசித்து,குல தெய்வம் பெயரை முதலில் சூட்டி,பிறகு பெயரை மாற்றி ஒரு போராட்டமே நடக்கும்.இன்றும் சிலருக்கு கூப்பிடுகிற பெயர் ஒன்றாகவும் வீட்டில் வைத்தபெயர் ஒன்றாகவும் இருக்கும்.அப்படியும் திருப்தியில்லாமல் அல்லாடிக்கொண்டிருப்பார்கள்.இதற்கு முடிவு கிட்டாமல் தவிப்பார்கள்.பெரும்பாலும் பெண்குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது மலர்களின் பெயரை இணைத்து வைப்பதை தவிர்ப்பது நல்லது.

மலர்விழி-மலர்க்கொடி,மலர்மதி,தாமரை,அல்லி,மல்லிகா,செண்பகம்,மனோகரி,தேவமலர்,பூவரசி,பூவிழி,பூங்கொடி,பூமதி,பூங்கோதை,மலர், இது போன்று மலரை சம்மந்த படுத்தி எந்த பெயர் வைத்தாலும் பெண்கள் சோக வாழ்வை சந்திக்கும்படி நேருகிறது. ஏன்..? பெரும்பாலும் மலர்கள் இயற்கையாகவே வாடிவிடும் தன்மை கொண்டது.அதன் பலம் வாடி-கருகும் இயல்பு கொண்டது.அது ஒருவரின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது.இது போல் இந்த பெயர்களையும் கவனியுங்கள்.

யோகிதா,விமலா,மேகலா,கன்னிகா,வெண்ணிலா,சங்கீதா,முகிலா,சந்தியா,பிரியா,சிநேகா,இது போன்று பெயரில் லா-தா-பா-கா என நெடில் தொக்கி நிற்கும் எழூத்தில் பெயர்கள் அமையும்போது ஏதோ ஒரு வித சோக பின்ன்னி வந்து விடுகிறது.ஆக பெயர் அமைக்கும்போது விழிப்புணர்வு தேவை.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates