Tuesday 13 January 2015

வில்லங்க பெண்களாள் விவாகரமாகும் திருமணங்கள் ஏன்...?

திருமணத்திற்கு முன்புவரை மிகவும் தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளும் சில பெண்கள் திருமணம் முடிந்தபிறகு ஒட்டுமொத்த குடும்பத்தின் வெறுப்புக்கு ஆளாகி தன்னை நம்பிய ஆணையும் ஏமாற்றி தானும் வாழாமல் தன்னை தொட்டு தாலி கட்டிய கணவனின் நிம்மதியை கெடுத்து,சினிமா வில்லி போல் நடந்து கொள்கிறார்கள்.ஒரு காலத்தில் ஆண்களாள்தான் பெண்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது அதிகமாக இருந்த்து,ஆனால் இன்று அதிகமாக பெண்களாள் ஆண்கள் வஞ்சிக்கப்படுவது அதிகமாகி வருகிறது.

இதற்கு என்ன காரணம்...?

இரண்டு கத்திகள் {வாள்} ஒரே உறையில் இருக்க்க்கூடாது என்பார்கள்.ஒருவர் சிந்திக்கவேண்டும்,மற்றவர் செயல்பட வேண்டும்.இருவருமே சிந்திப்பவர்களாக இருந்தால் செயல்படுவது யார்..? ஒரு ஆணும்-பெண்ணும் சேர்ந்து வாழும்போது ஒற்றுமை உணர்வு உண்டாக வேண்டுமென்றால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து போகும் குணம் கொண்டவராக இருக்கவேண்டும்.ஈகோ பிரச்சினைகள் வரவே கூடாது.மேலை நாட்டு நாகரீகங்கள் நமது கலாச்சரத்திற்கு ஒத்து வராது.இதற்கு என்ன செய்வது..? திருமணத்திற்கு முன்பு பொருத்தம் பார்க்கும் போது வெறும் நட்சத்திர பொருத்தங்கள் உதவாமல் போய்விடும்.ஆண்-பெண் ஜாதகங்களை வைத்து குணப்பொருத்தம் பார்க்க வேண்டும்.இருவரின் ஜாதகமும் பிழையின்றி கணிக்கப்பட்டிருக்கவேண்டும்.இந்த குணப்பொருத்தம் எல்லாஜோதிடர்களுக்கும் பார்க்கதெரியாது. சரி காதலித்து திருமணமென்ன்றால் என்ன செய்யலாம்..? அதுதான் ஒருவரின் குணம் மற்றவருக்கு தெரிந்து விடுமே பதமாக ஒதுங்கிடவேண்டியதுதான்.சிலர் காதலிக்கும்போது நடித்து ஏமாற்றிடுவார்கள்.திருமணத்திற்கு பிறகுதான் சுய ரூபம் தெரியவரும். இதற்கு என்ன செய்வது..? விரும்பினால் ஜாதக ஆய்வு செய்து கொள்ளலாம்.

ஆயிரம் காலத்து பயிர் திருமணம் என்பார்கள்.மிகவும் எச்சரிக்கை தேவை.இன்றைய காலகட்டத்தில் ஆணும்-ஏன்..?ஆணைவிட பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருப்பதால்,அதிகம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பதால் சராசரி பெண்ணின் நிலையிலிருந்து மாறிப்போய்விடுகிறார்கள்.புரட்சிபெண்,புதுமைப்பெண், என்ற ரீதியில் நாவடக்கம் இல்லை.அதிக சுதந்திரத்தை அனுபவிக்கும் சுகத்தைவிட்டு விலக ஒரு பெண்ணின் மனம் அவ்வளவு எளிதில்  விரும்புவதில்லை.கட்டுப்பாடுகளை உடைத்திட நினைக்கிறார்கள்.சில ஆண்கள் வெளியில் சொல்லமுடியாத வேதனையில் தவிக்கிறார்கள்.கோர்ட்டு வழக்குகளால் உனக்கு டைவர்ஸ் கொடுக்கமாட்டேன்.உன்னோடு சேர்ந்தும் வாழ மாட்டேன் என்று சில பெண்கள் அடம்பிடிப்பது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.

வாழ விடுங்கள் இல்லையென்றால் விட்டுக்கொடுத்து வாழூங்கள்.ஒருவரை ஒருவர் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.ப்ளீஸ்.......
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates