Sunday 18 January 2015

பெயரின் ஒலி ஜோதிடம் தெரியுமா..?

எண் கணித்த்தில்-அதாவது நியூமலராஜிப்படி உங்களின் பெயர் எப்படியிருக்கிறது....? அதிர்ஷ்ட்ட எண்ணில் பெயர் வைப்பது முக்கியம் அல்ல,அந்த பெயரின் ஒலி அதிர்ஷ்ட்டத்தில் இருக்கிறதா என்பதே மிக மிக முக்கியம்.இதைப்பற்றி விளக்கமாக பார்ப்போம்.

உதாரணமாக-ON-NO இவை இரண்டிற்கும் (07+05=12) என்பதே கூட்டு தொகை ஆனால் இரண்டு எழுத்தும் பெயரில் கலந்து வரும்போது ஒரே மாதிரியான பலனை தருவதில்லை. பெயரில் ON என்று வந்தால் நல்ல பலனைத்தருகிறது. அதுவே NO என்று வந்தால் கெட்ட பலனைத்தருகிறது. இதற்கான காரணம் ON என்பதற்கு இயக்கம்,துவக்கம்,செயலாக்குதல் என்று பொருளைத்தரும். NO என்பதற்கு இல்லை,நிறுத்து,விட்டுவிடு என்று பொருள் தரும்.இதுதான் காரணமாகும்.இப்போது  VINODHINI-MANO-வினோதினி பெயரில் வருகிற னோ என்ற வார்த்தையும்,மனோ என்ற பெயரில் வருகிற னோ என்ற வார்த்தையும் கவனிக்கதக்கது.

இதே போல் பெயரில் MAD-WAR-DI-DY-DHI-DIE-என பெயரில் வரும்போது வீழ்ச்சி,பண இழப்பு,திடீர் விபத்து,விபத்தில் மரணம்,அதிகசோதனைகள் வருகின்றன.சில உதாரண பெயர்கள்.DINA-KENNEDY-MAHATMA GANDHI-RAJEEV GANDHI-INDIRA GANDHI-SANJAY GANDHI-என இந்த பெயர்களை கவனியுங்கள்.இவர்களின் அகால மரணங்கள் உங்களுக்கு தெரிந்த விஷயங்கள்தான்.பெயரின் ஒலி பின்னால் வலியாக மாறாமல் இருக்க பெயர் அமைக்கும்போது கவனத்துடன் இருப்பது நல்லதல்லவா...?
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates