Saturday 24 January 2015

ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்யலாமா...?

ஒவ்வொரு ராசிக்கார்ர்களுக்கும் இந்த சந்தேகம் வருவது இயற்கைதான்.பொதுவாக மேஷம் ராசிக்கார்ர்களுக்கு அஷ்டமத்து சனி,ரிஷபம் ராசிக்கு கண்டக சனி ஏழாமிடத்தில்,சிம்ம்ம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நாலாமிடத்தில்,துலாம் ராசிக்கு பாதச்சனி இரண்டாமிடத்தில்,விருச்சிகம் ராசிக்கு ஜென்மச்சனி,ஒன்றாமிடத்தில்,தனுசு ராசிக்கு விரையச்சனி பனிரெண்டாமிடத்தில்,இந்த ராசிக்கார்ர்கள் அனைவரும் திருமணம் செய்யலாமா..? ஏன் செய்யக்கூடாது..? கடகத்தில் தற்சமயம் உச்சபலத்தில் இருக்கும் குரு தன் ஐந்தாம் பார்வையை விருச்சிகத்திற்கு காட்டுவதால் தோஷம் விலக்காகி விடுகிறது.அதோடு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது கவனமாக இருங்கள  பிறப்பு ஜாதகத்தில் சனி எப்படி உள்ளது..? என்பதையும் கவனிக்க வேண்டும்.ஒரு ஆண் அல்லது பெண்ணின் குணம் எத்தகையது என்பதையும் கண்டுணர்தல் அவசியம்.வெறும் நட்சத்திர பொருத்தம் கதைக்கு உதவாமல் போய்விடும்.

ஒரு ஆண்-பெண் ஜாதகத்தில் எவ்வித தோஷமிருந்தாலும் அடிப்படையில் குணம் நன்றாக இருந்தால் ஒத்து போகிற தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனசுமிருந்தால் வாழ்வில் பெரிய பிரச்சினைகளை சமாளிக்கும் ஆற்றல் வந்து சேரும்.அனுசரித்து போக்க்கூடிய குணம் வேண்டும்.ஒருவரின் நல்ல குணத்தை எவ்வாறு காண்பது,இதற்கு ஜோதிடத்தில் நிறைய வழிகள் உள்ளன.ஏனோ தானோவென்று பொருத்தம் பார்க்காமல் கூடுதல் கவனம் செலுத்தினால் குணத்தை கண்டுபிடிக்கலாம்,ஒருவரின் பிறந்த தேதி மாதம் வருடம்,பிறந்த நேரம்,பிறந்த இடம் சரியாக இருக்க வேண்டும்.இன்றைய கால கட்டத்தில் வயசு ஆகிவிட்டது என்பதினாலும்,தோஷம் உள்ள ஜாதகம் என்ற காரணத்தினாலும் சிலர் பொய்யாக ஜாதகம் தயாரித்து,ஏமாற்றி விடுகின்றனர்.இது தெரியாமல் பொருத்தம் பார்க்கும் ஜோதிடரை குறை கூறி விடுவார்கள்.

ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்யலாமா..? இந்த கேள்வி எதற்கு..? உங்களுக்கு திருமணம் கூடி வந்தாலே ஏழரையின் ஆதிக்கம்தான்.வேறு என்ன..?
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates