Sunday 25 January 2015

பொருத்தமில்லா பொருத்தம் என்றால் என்ன...?

ஆண்-பெண் இருவருக்கும் உடலுறவில் ஏற்படும் மகிழ்ச்சியை குறிக்கும் பொருத்தம் இதுதான்.ஐம்புலன்களும் இன்பமடையும்.இதில் சிக்கல் வந்தால் எல்லாமே குளறுபடியாகிவிடும்.வாழ்க்கை கசந்து வருத்தம் மேலிட வாழும் நிலை உருவாகும்.ஆண்-பெண் உறவு தடம் மாறி,தடுமாறி போய்விடும்.

இப்போது சில உதாரணங்கள்.

ஒரு பெண் பரணி என்றால் இதன் மிருகம்-யானை,

அதே சமயம் ஆண் நட்சத்திரம் உத்திரம் என்று வைத்துக்கொண்டால் இதன் மிருகம் எருது,முறைப்படி எட்டு பொருத்தம் உள்ளது.ஆனால் இது சரியான பொருத்தமாகாது.ஏன்..?யானைக்கு-எருது சரிதானா..? கொஞ்சம் யோசியுங்கள். இதை பொருத்தமில்லா பொருத்தம் என்றால் தகும்.

பகை மிருகம் என்பது வேறு,முரண்பட்ட மிருக நிலை சரியாக வருவதில்லை.கனவன்-மனைவி சேர முடியாத சூழல் உருவாகும் இல்லாவிட்டால் படுக்கையறை போர்க்களமாகும்,அதிக நாள் பிரிவை ஏற்படுத்தும்.

கார்த்திகை-ஆடு,இது பெண் என்றால்,மகம்-எலி இது ஆண் என்றால்,எட்டு பொருத்தம் உள்ளது.பெண்-ஆடு,ஆண்-எலி இது சரியான பொருத்தம் ஆகுமா..? இதைத்தான் பொருத்தமில்லா பொருத்தம் என்பது.

ரோகிணி-பாம்பு,ஆண் என்றால்,உத்திரட்டாதி-பசு பெண் என்றால் ஏழு பொருத்தம் உள்ளதுதான்,ஆனால் இது சரியான பொருத்தமாகாது.

மிருகசீரிஷம்-சாரைபாம்பு,ஆண்,அஸ்த்தம்-எருமை பெண் ஏழுபொருத்தமிருந்தாலும் செய்யலாமா..?

அவிட்டம்-ஆண்சிங்கம்,பூரட்டாதி-பெண் சிங்கம்.இவை பெண் களின் நட்சத்திரம் என்றால்,பூராடம்-குரங்கு இது ஆண் நட்சத்திரமாயின் பொருத்தம் இருக்கிறதுதான் செய்யமுடியுமா..?

ரேவதி-யானை பெண் எனில்,உத்திராடம்-பசு ஆண் எனில் ஒன்பது பொருத்தம் உள்ளதுதான். ஆனால் செய்யலாமா..? இப்படி முரண்பட்ட நிலை பொருத்தமில்லா பொருத்தமாகிவிடும்.இதையெல்லாம் கூர்ந்து கவனிக்காமல் அவசர முடிவெடுத்தால் சுக வாழ்வு சோகமாகிவிடும்.
Share:

No comments:

Post a Comment

© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates