Friday, 4 March 2016

தலையெழுத்து இணைய இதழில் இலவச திருமண பதிவு...

தலையெழுத்து இணைய இதழை தொடர்ந்து கவனித்து வாசித்து வரும் ஆண்-பெண் யாராக இருந்தாலும்.உங்களின் சுயவிபரங்களுடன் ஒருபக்க ஜாதக நகலுடன் இணைத்து.உங்கள் புகைப்படத்துடன் எனது ஜி மெயிலுக்கு அனுப்பவும்.தொடர்புதொலைபேசி எண் குறிப்பிடவும்.உங்களுக்கு ஏற்ற வரன் எனில் தொடர்பு கொள்வோம்,உங்கள் அனுமதியின்றி எவருக்கும் உங்களின் விபரங்கள் தரப்படமாட்டாது.பதிவு மட்டும் இலவசம்.நீங்கள் எந்த நாட்டில் வசிப்பவராக இருந்தாலும் பதியலாம்.ஜாதி-மதம்-இனம் குறிப்பிடவும்.

MY G mail-anbalakanastrosivam@gmail.com

Read More

Sunday, 19 July 2015

பெண்ணுக்கு ஏற்படும் உடல்நிலை மாற்றம்....

பெண் பருவமடைந்த பிறகு பல்வேறு உடல்நிலை மாற்றங்கள் உருவாகும்.இதை நன்கு புரிந்து செயல்படும் பெற்றோர்,உறவினர்,சக நண்பர்கள்,காதலர்,அலுவலக பணியாளர்கள் மற்றும் அந்த பெண்ணோடு ஒன்றி இணைந்து வாழ்கின்ற கனவர் யாராக இருந்தாலும் இதை அனுசரித்து போகாவிட்டால் பிணக்கும்,பிளவும்,பிரிவும் உருவாகிவிடும்.

எந்த நேரமும் ஒரு பெண் காதல் மூட் ஏற்பட்டபடி இருக்கமாட்டாள்.உடற்கூறு அப்படி இருக்காது.பொதுவாக பீரியட் என்று சொல்லப்படும் மாதவிடாய் சமயத்தில் வயிற்றுவலி வேதனையில் துடித்துக்கொண்டிருப்பாள்,அந்த நீங்க மரியாதையாக புரிந்து ஒதுங்க வேண்டும்,இல்லாவிட்டால் கோபம் தலைக்கேறி என்ன பேசுவது,என்ன திட்டுவது என்று தெரியாமல் போய்விடும் இது சிலசமயங்களில் பிரிவைக்கூட உண்டாக்கிவிடும்.

மாதவிடாய் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்கு பிறகுதான் உடல் சாதரணநிலைக்கு வரும்.அவள் உடல்உறவுக்கு ஏற்ற நிலை என்பது பார்வை,பேச்சு,சுறுசுறுப்பு,ஒருவித மகிழ்ச்சி கலந்த நக்கல் என ஒருவித கலகலப்பு தெரியவரும்.நீங்க வேலைக்கு கிளம்பி போகும் போது வரும்போது பூ வாங்கிட்டு வாங்க என்றால் நீங்க இன்று விருந்து சாப்பிடலாமென்று முடிவு செய்து கொள்ளலாம்.

இதைவிட்டு பெண்களின் மென்மை-தன்மையை ,உடற்கூறுகளின் மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு இயங்குதல் இடையூறுகளை ஏற்படுத்தும்.
Read More

Sunday, 21 June 2015

பெளர்ணமி யோகம் என்றால் என்ன...?

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வரும் சித்ரா பெளர்ணமி.
வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் வரும் வைகாசி விசாகம்.
ஆனி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் வரும் ஆடிபூரம் பெளர்ணமி
ஆவணி அவிட்டம்{திருவோணம்} நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி
புரட்டாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி
ஐப்பசி மாதம் ரோகிணியில் வரும் பெளர்ணமி
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி
மார்கழி மாதம் திருவாதிரையில் வரும் பெளர்ணமி
தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வரும் தைப்பூச பெளர்ணமி
மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் வரும் மாசிமகம் பெளர்ணமி
பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் வரும் பங்குனி உத்திரம் பெளர்ணமி

இப்படி சூரியனும்-சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் காலகட்டத்தில் மேற்படி நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் மகாபாக்கியசாலிகளாகவும்,மிக்க யோகமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்,இந்த காலகட்டத்தில் பிறப்பு நிகழ்ந்தால் புகழ்மிக்க வாழ்க்கையும் ராஜ வாழ்ஃவும் கிட்டும்.
Read More

Friday, 19 June 2015

பஞ்சபூதம் தெரியும்-இந்த பொருத்தமும் பார்க்க வேண்டும்.பார்த்தால்-உடலுறவில் ஒற்றுமை ஏற்படும்...

பிருதிவி-மண்-பூமி நட்சத்திரங்கள்.

அசுவினி-பரணி-கார்த்திகை-ரோகிணி-மிருகசிரிஷம்-ஆக ஐந்து.

அப்பு-அதாவது தண்ணிர் நட்சத்திரங்கள்.

திருவாதிரை-புனர்பூசம்-பூசம்-ஆயில்யம்-மகம்-பூரம்-இவை ஆறும்.

தேயு-அதாவது நெருப்பு நட்சத்திரங்கள்.

உத்திரம்-அஸ்த்தம்-சித்திரை-சுவாதி-விசாகம்-அனுஷம்-இவை ஆறும்.

வாயு-காற்று நட்சத்திரங்கள்.

கேட்டை-மூலம்-பூராடம்-உத்திராடம்-திருவோணம்-இவை ஐந்தும்.

ஆகாயம்-வெளி நட்சத்திரங்கள்.

அவிட்டம்-சதயம்-பூரட்டாதி-உத்திரட்டாதி-ரேவதி-இவை ஐந்தும்.

ஆண்-பெண் இருவரும் ஒரே பூத்த்தில் வரவேண்டும்.தண்ணிர்-நெருப்பு கூடாது.
Read More

பஞ்சபட்சி பொருத்தமும் பாருங்கள் ஒற்றுமைக்கு உதவும்...{வளர்பிறை}

அசுவினி-பரணி-புனர்பூசம்-கிருத்திகை-ரோகிணி-மிருகசிருஷம்-இவை ஆறு நட்சத்திரங்களும் வல்லூறு பறவை{அதாவது கருடன்-பருந்து}

திருவாதிரை-பூசம்-ஆயில்யம்-மகம்-பூரம்-இவை ஐந்தும் ஆந்தையாகும்.

உத்திரம்-அஸ்த்தம்-சித்திரை-சுவாதி-விசாகம்-இவை ஐந்தும் காகமாகும்.

அனுஷம்-கேட்டை-மூலம்-பூராடம்-உத்திராடம்-இவை கோழியாகும்.

திருவோணம்-அவிட்டம்-சதயம்-பூரட்டாதி-உத்திரட்டாதி-ரேவதி-இவை ஆறும் மயிலாகும்.

வல்லூருக்கு-ஆந்தையும்-மயிலும் பகை.

ஆந்தைக்கு-காகம்-கோழி பகை

காகத்துக்கு-கோழி-ஆந்தை பகை.

கோழிக்கு-மயில்-காகம்-வல்லூறு பகை

இவையாவும் வளர்பிறையில் பிறந்தவர்களுக்கான பறவைகள்.இது அப்படியே தேய்பிறைக்கு வேறு பறவைகள் வரும்.
Read More

கூடாத நாட்கள் எவை தெரியுமா..?

பரணி-கிருத்திகை-திருவாதிரை-ஆயில்யம்-மகம்-பூரம்-சித்திரை-சுவாதி-விசாகம்-கேட்டை-பூராடம்-பூரட்டாதி-இந்த பனிரெண்டு நட்சத்திரங்களும் சுப காரியங்கள் செய்ய ஆகாதவை.கடன் கொடுத்தால் திரும்ப கிடைக்காது.பிரயாணம் மேற்கொண்டால் அவதியுர நேரிடும்.நோய்வாய் பட்டால் அதன் கடுமை அதிகமாக இருக்கும்.
Read More
© தலையெழுத்து All rights reserved | Theme Designed by Seo Blogger Templates